UPDATED : மே 07, 2026 06:54 PM
ADDED : மே 07, 2026 06:55 PM
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த எருமனூரில் உள்ள டாக்டர் இ.கே.சுரேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு, டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.
செயலர் இந்துமதி சுரேஷ், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி, சி.இ.ஓ., அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டிமன்ற பேச்சாளர்கள் அருண், தமிழருவி மனோன்மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
இதில், டீன் கவிபாண்டியன், கல்லூரி முதல்வர் சின்னபொண்ணு, இந்துமதி சுரேஷ் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜேசுதாஸ், டாக்டர் இ.கே.சுரேஷ் அலைடு அண்டு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி முதல்வர் ஞானசுந்தரி, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் சக்திவேல் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

