UPDATED : மே 09, 2026 05:16 PM
ADDED : மே 09, 2026 05:17 PM
மேட்டுப்பாளையம்:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதில், அரசு பள்ளிகள் அதிக அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளன.
மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனது. மாணவி சனோபியா, 580 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி, வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
திவ்யதர்ஷினி, 568 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர், கம்ப்யூட்டர் பாடப்பிரிவில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி அப்சரா, 546 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார். 17 மாணவிகள், 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவியரை, தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டினர்.
காரமடையை அடுத்த புஜங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளி, 97.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவன் கமலேஷ், 518, லீலாதேவி, 513, நிஷாக்கா, 500 மதிப்பெண் என, முதல் மூன்று இடங்கள் பெற்றனர். மாணவ, மாணவியரை, தலைமை ஆசிரியை ஜோதிமணி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.
வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி நிவேதினி, 559 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் நிர்வாகிகள் பாராட்டினர்.
