UPDATED : ஜூன் 06, 2026 10:48 AM
ADDED : ஜூன் 06, 2026 10:49 AM
அ நிறம் | அளவு
கோவை:
ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி (எஸ்.என்.எம்.வி.,), சர்வதேச நிதி மற்றும் கணக்கியல் கல்வி துறையில் முன்னணி நிறுவனமான பெங்களூரு, குளோபல் எப்.டி.ஐ., பிரைவேட் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிதி மற்றும் கணக்கியல் துறையில் முன்னேற விரும்பும் மாணவர்களுக்கான படிப்பை வழங்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பல்கலை பட்டப்படிப்புடன் தொழில்முறை தகுதியையும் ஒரே நேரத்தில் பெறும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டம் மாணவர்களை கணக்கியல், தணிக்கை, வரிவிதிப்பு, நிதி மேலாண்மை, ஆலோசனை சேவைகள் போன்ற துறைகளில் சிறந்த தொழில் வாய்ப்புகளுக்கு தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சுப்பிரமணி தெரிவித்தார்.
