தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 11, 2026 04:33 PM

ADDED : ஜூன் 11, 2026 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 04:33 PM ADDED : ஜூன் 11, 2026 04:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நலத்துறை மாணவர், மாணவியர் விடுதிகளில் சேர தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மசக்காளிப்பாளையம் மற்றும் சுந்தராபுரத்தில் உள்ள விடுதிகளில் பட்டப்படிப்பு, முதுநிலை, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் சேரலாம். இங்கு தங்கும் வசதி மற்றும் மூன்று வேளை உணவு இலவசம்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீ., தொலைவில் இருக்க வேண்டும். இந்த நிபந்தனை மாணவியருக்கு பொருந்தாது.

விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகள் அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us