UPDATED : ஆக 09, 2026 12:51 PM
ADDED : ஆக 09, 2026 12:52 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள கே.எல்.கே., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 9, வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் அமைந்துள்ள கே.எல்.கே., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று, கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இயங்கி வரும் ஜப்பானிய தனியார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
பிளஸ் 2, டிப்ளமா, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படித்த, 18 - 24 வயது வரையிலான இருபாலர், முகாமில் பங்கேற்கலாம். காலை 8:30 மணி முதல் பிற்பகல் 02:30 மணி வரை முகாம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
