UPDATED : செப் 10, 2026 05:19 PM
ADDED : செப் 10, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
கோவை:
இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், 'ஸ்பைடர் 8' என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
மின்-கழிவுப் பொருட்களிலிருந்து மாணவர்கள் உருவாக்கிய புதுமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
சிறப்பு விருந்தினராக சென்னை சோகோ கார்ப்பரேஷன் தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன் பங்கேற்று, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திறன்களை வளர்த்துக் கொள்வதுடன், சரியான மனப்பான்மையுடன் தொடர்ந்து கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மாணவர்களுக்கு 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
