தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடுத்த தலைமுறை... விண்வெளியில்!

அடுத்த தலைமுறை... விண்வெளியில்!

அடுத்த தலைமுறை... விண்வெளியில்!


UPDATED : அக் 11, 2026 01:22 PM

ADDED : அக் 11, 2026 01:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 01:22 PM ADDED : அக் 11, 2026 01:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழில் நகரமான திருப்பூர், இயந்திரம், தானியங்கி தொழில்நுட்பம் என வேகமாக மாறி வருகிறது. இந்தப் பயணத்தின் அடுத்த பார்வை விண்வெளியை நோக்கி திரும்ப வேண்டிய நேரம் இது.

ஆண்டுதோறும் அக்., 4 முதல் 10ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு கருப்பொருள் 'ராக்கெட் புரட்சி'. குறைந்த செலவில் ராக்கெட் தயாரிப்பு, மீண்டும் பயன்படுத்துதல், தொலைதுார ஆய்வு என ராக்கெட் தொழில்நுட்பம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

ஸ்புட்னிக் - 1 முதல் சந்திரயான், மங்கள்யான் வரை விண்வெளி பயணம் நீண்ட துாரம் வந்துள்ளது. செயற்கைக்கோள்கள் இன்று வானிலை, செல்போன், தொலைக்காட்சி, ஜி.பி.எஸ். என அன்றாட வாழ்க்கையில் இடம்பிடித்துள்ளன.

திருப்பூர் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் இந்த ஆர்வத்தை வளர்க்க அறிவியல் கண்காட்சிகள், ராக்கெட் மாதிரி உருவாக்கம், வினாடி-வினா போன்றவை நல்ல தொடக்கம். ஒரு காலத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்த மனிதன் இன்று விண்வெளியில் பயணிக்கிறான். நாளைய விண்வெளி பயணிகளில் திருப்பூர் மாணவர்களும் இருக்கட்டும்.

தனியாரும் களத்தில்...


குறைந்த செலவில் ராக்கெட் தயாரிப்பதும், பயன்படுத்திய ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்துவதும் விண்வெளி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியம். செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவும், நிலவு, செவ்வாய் ஆய்வுகளுக்கும் ராக்கெட் அவசியம்.

மங்கள்யானை முதல் முயற்சியிலேயே செவ்வாய் சுற்றுப்பாதையில் செலுத்தி இந்தியா சாதனை படைத்தது. தற்போது மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் முயற்சி நடக்கிறது. அரசுடன் தனியார் நிறுவனங்களும் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

- ராஜு, மாநில கருத்தாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

ஆய்வு அவசியம்



பிரபஞ்சம் குறித்த மனித அறிவு இன்னும் குறைவு. எனவே விண்வெளியில் தொடர்ந்து ஆய்வு வேண்டும். காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பது முதல் பிற கோள்களில் உள்ள வளங்களை ஆய்வு செய்வது வரை இதன் பயன்பாடு விரிவானது.

பள்ளி பருவத்திலிருந்தே விண்வெளி கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும். இஸ்ரோ, நாசா மட்டுமின்றி விண்வெளி துறை சார்ந்த பல நிறுவனங்களிலும் அறிவியல், பொறியியல், மருத்துவம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது.

- பாலமுருகன், இயற்பியல் பேராசிரியர், அவிநாசி அரசு கலைக்கல்லுாரி.

தேடலாக மாறட்டும்


வானிலை, செல்போன், தொலைக்காட்சி, ஜி.பி.எஸ்., என செயற்கைக்கோள் பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. சந்திரயான், மங்கள்யான் போன்ற சாதனைகள் மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகள், வினாடி வினா போட்டிகள் அந்த ஆர்வத்தை தேடலாக மாற்றும்.

- சுவாதி, முதுகலை பட்டதாரி.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us