UPDATED : நவ 05, 2026 08:27 PM
ADDED : நவ 05, 2026 08:28 PM
அ நிறம் | அளவு
செந்துறை:
செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியை தேவமனோகரி தலைமை வகித்தார்.
உதவி தலைமையாசிரியர்கள் வாசுகி, ராஜாக்கிளி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிங்கப்பெண் அதிரடிப் படையின் சிறப்பு எஸ்.எஸ்.ஐ., சித்ரா பங்கேற்று பாலியல் குற்றங்களில் இருந்து உடல், மனரீதியாக தற்காத்து கொள்ளும் முறைகள், அலைபேசி பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
