UPDATED : நவ 29, 2026 12:44 PM
ADDED : நவ 29, 2026 12:45 PM
அ நிறம் | அளவு
தேனி:
ஆண்டிபட்டி மகளிர் அரசு ஐ.டி.ஐ.,யில் பொது, தனியார் கூட்டமைப்பின் கீழ் டெக்ஸ்டைல் மெகாடிரானிக்ஸ் பிரிவிற்கு ரூ.28 ஆயிரம் சம்பளத்தில் ஒப்பந்த பயிற்றுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
டெக்ஸ்டைல் மெகாடிரானிக்ஸ் அல்லது டெக்ஸ்டைல் துறை சார்ந்த படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மேலும் 1 முதல் 3 ஆண்டு அனுபவம் அவசியம்.
2026 ஜூலை 1ல் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். கல்வி தகுதி, விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் டிச., 22க்குள் தலைவர், நிலைய மேலாண்மை குழு, மகளிர் அரசு ஐ.டி.ஐ., ஆண்டிபட்டி - 625 512 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். என கலெக்டர் சிவகிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.
