தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பீகாரில் கல்வி மறுமலர்ச்சி

பீகாரில் கல்வி மறுமலர்ச்சி

பீகாரில் கல்வி மறுமலர்ச்சி


UPDATED : டிச 20, 2010 12:00 AM

ADDED : டிச 20, 2010 12:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2010 12:00 AM ADDED : டிச 20, 2010 12:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மிகவும் பின்தங்கிய பீகாரில், பள்ளி கல்வியை எழுச்சிபெற செய்யும் பொருட்டு, பலவித நடவடிக்கைகளை நிதிஷ் குமார் அரசு மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டு அமைச்சக உயர்மட்டக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


அதனடிப்படையில் தற்போது 11 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள் வாங்குவதற்கான மானியத்தொகை ரூ.2000 இலிருந்து 2500 ஆகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு சீருடைகளுக்கான உதவித்தொகை ரூ.700 இலிருந்து 1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணாக்கருக்கு &'முதலமைச்சர் மேதா புரஷ்கார்' திட்டத்திலிருந்து கல்வி உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர பள்ளி சுற்றுலா செல்வதற்கு, ஒரு பள்ளிக்கு அளிக்கப்பட ரூ.5000 மானியத்தொகை, ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.


அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, 1 ஏக்கர் மற்றும் அதற்கு கூடுதலான பரப்பளவை கொண்டுள்ள நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதோடு, செயல்படாமல் இருக்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும் மாநிலம் முழுவதும் சுமார் 1000 உயர்நிலைப் பள்ளிகள் திறக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, மத போதனை பள்ளிகளில் படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கும், புனர்வாழ்வு மையங்களில் தங்கியிருக்கும் மகா தலித்துகளுக்கும், தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us