தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உங்கள் கனவுகளை உணருங்கள்..

உங்கள் கனவுகளை உணருங்கள்..

உங்கள் கனவுகளை உணருங்கள்..


UPDATED : டிச 28, 2010 12:00 AM

ADDED : டிச 28, 2010 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2010 12:00 AM ADDED : டிச 28, 2010 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எவ்வித பாகுபாடின்றி அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று கனவு. நம்மில் பலர் நாம் காணும் கனவுகளை நிறைவேற்ற முயல்வோம். ஆனால் பொருளாதாரம், கல்வி, மற்றும் உடல்நலம் உள்ளிட்ட சில காரணிகள், "கனவு காண்பதை நிறுத்துங்கள், தற்போதுள்ள நிலைமையில் முன்னேற வழி என்ன என்பதை யோசியுங்கள்&' என சிந்திக்க வைக்கின்றன. அத்தகைய சூழலில் நாம் கண்ட கனவின் மீது உள்ள பார்வை முற்றிலும் விலகுகின்றன. இத்தகைய மனநிலையை பெற்றவர்கள் எவ்வாறு கனவை அடைய முடியும் என்பதற்கான சில வழிகளை இங்கு காண்போம்.


* மனதில் எழும் உறுதியற்ற நிலையை மாற்றுங்கள். அதன் வழியாக ஆக்கும் திறனை பெறலாம். 
* உங்களின் மீது கூடுதலான நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு எந்த செயல் முக்கியம் என்று தோன்றுகிறதோ, அதை முடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்.
* சாந்தமாக இருங்கள். உங்களுடைய கோபம், தன்னலம், பயம் மற்றும் சந்தேகங்களை விட்டொழியுங்கள்.
* புதியனவற்றை கற்கும் போது மனதை காலியாக வைக்க வேண்டும். காலியான பாத்திரத்தில் பொருளை நிரப்புவதைப் போல புதிய விஷயங்களை கற்க வேண்டும்.
* உங்களுக்கு தேவையானவை எது? தேவையற்றவை எது? என்பதை அறிவதில், மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
* அனைத்து தரப்பையும் உற்றுநோக்கி உங்கள் கனவிற்கு உருவம் கொடுங்கள்.
* துணிவு, தெளிவு மற்றும் ஈடுபாட்டுடன் இருங்கள். உங்களுடைய கனவையும் எண்ணங்களையும், விருப்பம் இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
* நேர்மையான வாழ்வை வாழுங்கள்.
* குறிக்கோள், பணி, கற்பனை, வாழ்க்கைத்தொழில் உள்ளிட்டவற்றின் வாயிலாக உங்கள் கனவுகளை மெருகேற்றுங்கள்.
* உங்களையும் உங்கள் கனவையும் முழுமையாக நம்புங்கள்.
* உங்கள் வழியில் வரும் நல்ல சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள்.


மேற்கூறிய சில வழிகளை பயன்படுத்தி, உங்கள் கனவுகளை உணருவதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் வழியையும் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us