UPDATED : ஜன 08, 2011 12:00 AM
ADDED : ஜன 08, 2011 11:20 AM
பணி மதிப்பீடு, படிப்பு திறனை மேம்படுத்தல் மற்றும் மாணவர் உதவிக்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தல் போன்ற விஷயங்களை உள்ளடக்கிய பாடத்திட்டங்களை, திறன் மேம்பாட்டு பயிற்சி பாடத்திட்டம் என்ற பெயரில் ஆசிரியர்களுக்காக ஆன்லைனில் இக்ன்னோ நடத்துகிறது. இந்த படிப்பானது கல்விக்கூட ஆலோசகரின் பயிற்சி - ஆன்லைன் என்று அழைக்கப்படுகிறது.
திறந்தவெளி தொலைதூர கற்றலின்(ஓ.டி.எல்) தியரி மற்றும் பிராக்டிகல் அம்சங்களை உள்ளடக்கிய இந்த பாடத்திட்டமானது, தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதில் ஈடுபட்டிருக்கும் அல்லது ஈடுபட விரும்பும் ஆசிரியர்களுக்கானது. இந்த படிப்பை முடித்த ஒரு ஆசிரியர், மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், குறைபாடுள்ள மற்றும் ஊனமுற்ற மாணவர்களுக்கு சிறந்த முறையில் உதவவும், நவீன உபகரணங்களை கற்பித்தலுக்கு பயன்படுத்தவும் நல்ல முறையில் தயாராகி இருப்பார் என்று இக்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.
