தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை

வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை

வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை


UPDATED : ஜன 10, 2011 12:00 AM

ADDED : ஜன 10, 2011 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2011 12:00 AM ADDED : ஜன 10, 2011 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பார் கவுன்சில் ஆப் இந்தியா என்னும் தேசிய அளவிலான வழக்கறிஞர்களுக்கான அமைப்பு வெளிநாட்டு வழக்கறிஞர்களை இந்தியாவில் தொழில் புரிய அனுமதிக்கப்போவதில்லை என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. இது இறுதியான முடிவு இல்லை என்ற போதும் இது தான் தனது கருத்து என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த முடிவை பல்வேறு கோணங்களிலிருந்து ஆய்வு செய்து வருவதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாடெங்குமுள்ள வழக்கறிஞர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் இதனால் வழக்கறிஞர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்திய சட்டத் தொழில் என்பது சேவை நோக்கை மையமாகக் கொண்டது என்றும் இதில் வணிக நலன்களும் கருத்தில் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது.


இந்திய வழக்கறிஞர்கள் தங்களது திறன் மேம்பாட்டை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் சுயமாக தங்களை மேம்படுத்திக் கொள்ளும்
முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் மத்திய சட்ட அமைச்சகம் நம்புவதாக அது தெரிவித்துள்ளது. இந்த அம்சங்களை பார் கவுன்சில் கவனத்தில் கொண்டிருக்கும் என நம்புவதாகவும் அது கூறியுள்ளது. சட்ட சீர்திருத்தங்கள் என்பவை அவசியமானவை என்பதை பார் கவுன்சில் உணர்ந்திருக்கும் என்றும் மத்திய சட்ட அமைச்சகம் கருத்துக் கூறியுள்ளது.


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,எம்.பி.ஏ., திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பணிபுரிவோருக்கான எம்.பி.ஏ.,படிப்பை வழங்குகிறது. வருகிற ஜனவரி மாதம் இத்துறை சார்ந்த வகுப்புகள் துவங்க உள்ளன.


தொழிலதிபர்கள் சிந்தனைகள், ரீடெயில் பேங்கிங், கல்வி நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் உள்ளிட்ட தனித்துறைகளில் எம்.பி.ஏ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலை பட்டப்படிப்புடன் 3 வருட தொழில் அனுபவம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.msuniv.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us