UPDATED : ஜன 10, 2011 12:00 AM
ADDED : ஜன 10, 2011 02:16 PM
இந்த தேர்வை எழுத பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2011 ஜூலை 1 தேதியன்று 20 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு வயது தளர்வு, 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு. இந்த தேர்வை எழுதுவதன் மூலம், இந்தியாவில் உள்ள 11 சட்ட பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்பு, பட்டமேல் படிப்புகளில் சேர முடியும்.
சட்ட பல்கலைக்கழகங்கள்
1. நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவர்சிட்டி, பெங்களூரு
2. நல்சார் யுனிவர்சிட்டி ஆப் லா, ஐதராபாத்
3. நேஷனல் லா இன்ஸ்டிடியூட் யுனிவர்சிட்டி, போபால்
4. தி வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் ஜுடிகல் சயின்சஸ், கோல்கட்டா
5. நேஷனல் லா யுனிவர்சிட்டி, ஜோத்பூர்
6. இதயத்துல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டி, ராய்ப்பூர்
7. குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி, காந்திநகர்
8. டாக்டர் ராம் மனோகர் லாகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி, லக்னோ
9. ராஜிவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் லா, பாட்டியாலா
10. சாணக்யா நேஷனல் லா யுனிவர்சிட்டி, பாட்னா
11. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் அட்வான்ஸ்டு லீகல் ஸ்டடீஸ், கொச்சின்
ஆகிய 11 சட்ட பல்கலைக்கழகங்களில், கிளாட் தேர்வை எழுதுவதன் மூலம் சேர முடியும். இந்த நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 15ம் தேதி மதியம் 3 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது. இதற்கான விண்ணப்பம் மேற்கூறிய பல்கலைக்கழகங்
களிலும், குறிப்பிட்ட தபால் நிலையங்களிலும் ஜனவரி 11ம் தேதி முதல் கிடைக்கும்.
இந்த தேர்வில் லீகல் ஆப்டிடியூட், லீகல் அவேர்னஸ், லாஜிக்கல் ரீசனிங், பொது அறிவு, தற்போதைய நிகழ்வுகள், ஆங்கில புரிந்துணர்வு சோதனை மற்றும் கணிதம் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 2 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு www.clat.ac.in/ இமெயில் helpdesk@clat.ac.in
