தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம்

விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம்

விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம்


UPDATED : மார் 15, 2011 12:00 AM

ADDED : மார் 15, 2011 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2011 12:00 AM ADDED : மார் 15, 2011 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை, திரையரங்குக்கு வரவழைப்பதற்காக, திரைப்படத்துறையினர் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அவற்றில் பிரதான ஒன்று டிஜிட்டல் தொழில்நுட்பம். தற்சமயம், டிஜிட்டல் திரைப்பட மோகம் அதிகமாக பரவி வருகிறது.


டிஜிட்டல் காட்சி தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் "3டி' மற்றும் "ஸ்டீரியோ' திரைப்படங்கள் பொருளாதார அடிப்படையில் சிக்கனமானது. இதற்கு திரைப்பட சுருள்கள் (ரீல்கள்) அதிகமாக தேவையில்லை. இளைய சமுதாயத்தினரை கவரும் வகையில் அதிகமான "3டி' திரைப் படங்கள் அமெரிக்காவில் உருவாக்கப் படுகின்றன.


கடந்த வருடம் வெளியாகி உலகமெங்கிலும் வசூலில் சாதனை புரிந்த "அவதார்&' திரைப்படம் தான், இதற்கு உச்ச அளவான உதாரணமாகும். இப்படத்தின் விஷூவல் எபெக்ட்ஸ், "3டி' தொழில்நுட்பத்திற்கு 30 லட்சம் மணி நேரம், மனித உழைப்பு தேவைப்பட்டது.


விஷூவல் எபெக்ட்ஸ் (VFX) என்பது சாதாரணமாக இயங்கக் கூடிய ஒரு மென்பொருள் மட்டுமில்லாமல், முமுமையான தொழில்நுட்பமாகவும் இருக்கிறது. உங்களது வேலையை சிறப்பாக செய்வதற்கும், சிக்கல்களை தீர்ப்பதற்கும், இந்த மென்பொருளில் உள்ள டூல்ஸ்களை பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.


சிறப்பான விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பத்திற்கு திறமையையும் மற்றும் டூல்ஸ்களையும் இணைந்து பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமானது. நிமிடத்திற்கு 20 லட்சம் நாம் அனிமேஷன் மூலமாக பல வகையான உருவங்களை உருவாக்கி உயிர் கொடுக்கலாம்.


நிஜமான தோற்றத்தைப் போன்ற அமைப்பை முதலில் உருவாக்கி, அதற்கு தகுந்த விஷூவல் ஸ்பெக்ட்ஸ் கொடுத்து நாம் கற்பனை செய்யும் அனைத்தையும், நிஜத்தில் செயல்படுத்தலாம். ஒரு திரைப்படத்தில் ஓடக் கூடிய 1 நிமிட ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.


படிப்புகள்
மூன்று வருட இளநிலை படிப்பு, 1 வருட டிப்ளமோ படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு என பல்வேறு பிரிவுகளில் கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்களில் விஷூவல் எபெக்ட்ஸ் தொடர்பான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்படிப்புக்கு பிளஸ் 2 தகுதி போதுமானது.


1.இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட், அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி(ஐ.சி.ஏ.டி.,), சென்னை. (www.icat.ac.in )
2. சிரிஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட், அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி, பெங்களூரு. (srishti.ac.in/)
3.பிக்காஸோ அனிமேஷன் காலேஜ், டில்லி மற்றும் நொய்டா. (www.picasso.co.in/)


வேலைவாய்ப்புகள்
இனி வரும் காலங்களில் வேலைவாய்ப்பு மிக்க துறையாக விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம் இருக்கும். இந்தியாவைப் பொறுத்த வரை, இது வேகமாக வளரும் துறை. வெளிநாட்டில் எண்ணிலடங்கா வேலைவாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்கள் டிஜிட்டல் ஆர்டிஸ்ட், கம்போசிடர், டிஜிட்டல் எபெக்ட்ஸ் அனிமேட்டர், டிஜிட்டல் எபெக்ட்ஸ் பெயின்டர், மாடுலர், பிரிவிசுவலைசேசன்ஸ் ஆர்டிஸ்ட், டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் விஷூவல் எபெக்ட்ஸ் சூப்பர்வைசர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us