தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வழிகாட்டியை வாழ்த்திய மாணவர்கள்

வழிகாட்டியை வாழ்த்திய மாணவர்கள்

வழிகாட்டியை வாழ்த்திய மாணவர்கள்


UPDATED : மார் 26, 2011 12:00 AM

ADDED : மார் 26, 2011 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 26, 2011 12:00 AM ADDED : மார் 26, 2011 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை வழிகாட்டி நிகழ்ச்சியில், கலந்துகொண்ட மாணவர்களின் கருத்து: என்.ஆஷிகா, பிளஸ் 2வில் காமர்ஸ் குரூப் முடித்துள்ளேன். ஏற்கனவே சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் அதற்காக ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்ற கனவும் இருந்தது. வழிகாட்டி கருத்தரங்கில் நடந்த ஐ.ஏ.எஸ்., குறித்த சொற்பொழிவை கேட்ட பிறகு இன்னும் தெளிவு பிறந்துள்ளது. மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி.


ஏ.சிந்தியா, மதுரை: கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் முடித்துள்ளேன். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். கவுன்சிலிங்கில் எனக்கு இடம் கிடைக்கும். நிறைய படிப்புகளைப் பற்றி எனக்கு தெரியாமல் இருந்தது. இங்கு வந்த பிறகு தான் பல்வேறு படிப்புகளை அறிந்துகொண்டேன். எனது குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரியாகப் போகிறேன். இதற்கு வழிகாட்டியும் ஒரு காரணமாக அமைந்தது.


பி.ராஜலட்சுமி : சி.ஏ., படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இதற்கு என்ன செய்வது என தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். வழிகாட்டி, நிகழ்ச்சி அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. பி.காம்., மற்றும் சி.ஏ.,யை ஒரே நேரத்தில் படிக்கப் போகிறேன். எனது குடும்பத்தில் நான் முதல் பட்டதாரி ஆகப்போகிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


ஆர்.சாய்பிரசாந்த் : காமர்ஸ் குரூப் முடித்துள்ள நான், தேர்வில் 1,100 மதிப்பெண் எடுப்பேன். சி.ஏ. படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். டிகிரி படிக்காமல் நேரடியாக சி.ஏ. படிக்கப் போகிறேன். இந்த ஐடியா வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்த பின் தான் எனக்கும் வந்தது. சி.ஏ., படித்தால் வேலை நம்மை தேடி வரும். நிறைய சம்பாதிக்கலாம்.


எம்.பெனசிர் : காமர்ஸ் குரூப் முடித்துள்ள நான், பி.காம். டிகிரியையும் சி.ஏ.வையும் சேர்த்து படிக்கப் போகிறேன். சி.ஏ. படித்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகலாம். இன்ஜினியரிங், மருத்துவம் நிறைய செலவாகும். சி.ஏ. படிக்க அப்படி செலவாகாது.


எஸ்.சபரி பிரியதர்ஷினி : ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது ஆவல். நாம் படிக்கும் படிப்பு, திரில்லிங் ஆகவும் இருக்க வேண்டும். இப்படிப்பு இல்லாவிட்டால் பயோ இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். தினமலர் நாளிதழில் வெளிவந்த பிளஸ் 2 மாதிரி வினாத்தாள் பயனுள்ளதாக இருந்தது. பொதுத் தேர்வுக்கு முன் நடத்திய ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியையும் மறக்க முடியாது.


எம்.அன்புச்செல்வி : கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் முடித்துள்ள நான், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க நினைக்கிறேன். இதைப் படித்தால் நல்ல சம்பளத்துடன் எளிதாக வேலை கிடைக்கும் என்கின்றனர். வழிகாட்டி கண்காட்சியில் பல கல்லூரிகளின் ஸ்டால்களை ஒரே இடத்தில் பார்க்க முடிந்ததால், புதிய பாடங்கள் பற்றியும் அறிய முடிந்தது.


வி.பிரவீன் : பயோ மேத்ஸ் குரூப் முடித்துள்ள நான், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். எனது பெற்றோரின் விருப்பமும் அது தான். ஸ்டால்களைப் பார்த்த பிறகு, நிறைய ஐடியா கிடைத்தது. கல்லூரிகளில் உள்ள வசதிகளை தெரிந்துகொண்டேன்.


ஆர்.சண்முக பிரீத்தி : பயோ மேத்ஸ் குரூப் முடித்துள்ள நான், பி.டெக்., ஐ.டி., படிக்க விரும்புகிறேன். இதைப் படித்தால் நல்ல வேலை, சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இங்கு வந்த பிறகு தான், தமிழ்நாட்டில் இவ்வளவு கல்லூரிகள் இருக்கின்றனவா என ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே இடத்தில் விண்ணப்பங்களை வாங்க முடிந்ததால், கண்காட்சி பயன் உள்ளதாக இருந்தது.


கே.சூரிய பிரகாஷ் : கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் முடித்துள்ள நான், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். இக்கண்காட்சி, ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக போவதைத் தவிர்த்து விட்டது. ஐ.ஏ.எஸ்., கடல்சசார் படிப்புகளைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us