UPDATED : ஏப் 07, 2011 12:00 AM
ADDED : ஏப் 07, 2011 12:19 PM
மத்திய அரசுப் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., குழுமம் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் எனப்படும் ஐ.எப்.எஸ்., தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வயது
ஐ.எப்.எஸ்., தேர்வு எழுத விரும்புபவர்கள் 01.07.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்ட வராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
யு.பி.எஸ்.சி., நடத்தும் ஐ.எப்.எஸ்., தேர்வினை எழுத பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், தாவரவியல், வேதியியல், மண்ணியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி, இன்ஜினியரிங் படிப்பு ஆகியவற்றில் பட்டப் படிப்பு முடித்தவர்களும் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி
ஐ.எப்.எஸ்., தேர்வை எழுத ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் ரூ.100/ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் ரொக்கமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை நெட் பேங்கிங் முறையிலோ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.
ஆப்லைனில் விண்ணப்பிப்பவர்கள் ரூ.200/க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆப்லைனில் விண்ணப்பிப்பவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட தபால் அலுவலகங்களிலிருந்து ரூ.30/ கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலமாகவோ அல்லது சாதாரண தபால் மூலமாகவோ 25.04.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Indian Forest Service Examination 2011 " என்று குறிப்பிட வேண்டும். இந்தத் தேர்வு பற்றிய முழு விபரங்களை அறிய இணையதளம் அல்லது விண்ணப்பத்துடன் வழங்கப்படும் தகவல் கையேட்டினைப் பார்க்கவும்.
முகவரி
Controller of Examinations,
Union Public Service Commission,
Dholpur House,
Shajahan Road,
New Delhi - 110069.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 25.04.2011
