UPDATED : ஏப் 09, 2011 12:00 AM
ADDED : ஏப் 09, 2011 07:41 PM
புதுச்சேரியில் நேற்றுத் துவங்கி தொடர்ந்து 3 நாட்களாக தினமலர் சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் நடத்தப்படும் வழிகாட்டி நிகழ்ச்சியில் பல கல்வி ஆலோசகர்கள் பேசினர்.
ஆலோசனைக்குப்பின் மாணவர்களின் மேற்படிப்பு தொடர்பான சந்தேகங்களுக்குக் கல்வி வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் உடன் வந்த பெற்றோர்களும் வல்லுனர்கள் கூறிய கருத்துக்களைக் கவனமாக
குறிப்பு எடுத்துக் கொண்டனர்.
கருத்தரங்கில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலுõர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எந்தக் கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது என்பதை விளக்கும் முழுமையான வழிகாட்டி புத்தகம் இலவமாக வழங்கப்பட்டது.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர், அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வி நிறுனங்களில் ஸ்டால்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு தேவையான விளக்கங்களைப் பெற்றனர்.
நேற்று துவங்கிய வழிகாட்டி நிகழ்ச்சி தொடர்ந்து 10ம் தேதி வரை நடக்கிறது.
