UPDATED : ஏப் 15, 2011 12:00 AM
ADDED : ஏப் 15, 2011 10:58 AM
நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட எட்டு ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களுக்கு, கடந்த மார்ச் 24ம் தேதி லோக்சபா அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ரோபர் (பஞ்சாப்), புவனேஷ்வர் (ஒரிசா), காந்திநகர் (குஜராத்), மேடக் (ஆந்திரா), பாட்னா (பீகார்), ஜோத்பூர் (ராஜஸ்தான்), மாண்டி (இமாச்சலப் பிரதேசம்), இந்தூர் (மத்திய பிரதேசம்) மற்றும் வாரணாசி (உத்தரபிரதேசம்) ஆகிய எட்டு ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும். மேலும் பனாரஸ் இந்துபல்கலைக்கழகத்துக்கும் (பி.எச்.யு.,) ஐ.ஐ.டி., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1951ம் ஆண்டு, மேற்குவங்கத்தின் காரக்பூர் என்ற இடத்தில் முதன்முதலாக ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1958ல் மும்பையிலும், 1959ல் சென்னை, கான்பூர் ஆகிய இடங்களிலும் ஐ.ஐ.டி.,கள் உருவாக்கப்பட்டன. 1963ல் டில்லி, 1994ல் கவுகாத்தி, 2001ல் ரூர்க்கி ஆகிய ஐ.ஐ.டி.,கள் தொடங்கப்பட்டன. 2008ம் ஆண்டு வரை நாட்டில் இந்த ஏழு ஐ.ஐ.டி.,கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. 2008ல் புதிதாக எட்டு ஐ.ஐ.டி.,களை மத்திய அரசு தொடங்கியது. இந்த எட்டு ஐ.ஐ.டி.,களுக்கு தற்போது லோக்சபா அனுமதி வழங்கியுள்ளது.
