UPDATED : ஏப் 15, 2011 12:00 AM
ADDED : ஏப் 15, 2011 02:21 PM
சென்னை: புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான அனுமதி விண்ணப்பங்களை இந்த வார இறுதியில் பரிசீலிக்கத் தொடங்கும்.
தமிழகத்தில், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், மேலாண்மை மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை மட்டுமே நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை தொடங்குவதற்காக மொத்தம் 120 க்கும் மேற்பட்ட அனுமதி விண்ணப்பங்கள் ஏ.ஐ.சி.டி.இ -க்கு வந்துள்ளன.
தலா 40 விண்ணப்பங்கள் பொறியியல் கல்லூரி மற்றும் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. கல்வி நிறுவனங்களுக்கும், மீதமுள்ளவை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் உரியவை. கடந்த வருடம், புதிய விண்ணப்பங்களை ஏற்பதற்கு அதிக நிபந்தனைகள் இருந்தன. ஆனால் இந்த வருடம் 2 முக்கிய நிபந்தனைகள் மட்டுமே உள்ளன.
நகரப் பகுதிகளில் பொறியியல் கல்லூரி தொடங்க 5 ஏக்கர் நிலம் வேண்டும் மற்றும் கிராமப்பகுதிகளில் 10 ஏக்கர் நிலம் தேவை. அதேசமயம், பாலிடெக்னிக் மற்றும் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு தேவைப்படும் இட அளவு விதிமுறைகள் மாறுபட்டவை.
முதல் நிலையில், கமிட்டியானது, ஒரிஜினல் ஆவணங்களை சரிபார்க்கும். ஆவணங்களை சரிபார்த்த பிறகு, நிபுணர் குழுவானது நேரடியாக வருகை தரும். மேலும் வரும் ஏப்ரல் 20 ம் தேதி வரை ஆன்லைனில் ஏ.ஐ.சி.டி.இ -க்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
