UPDATED : ஏப் 27, 2011 12:00 AM
ADDED : ஏப் 27, 2011 11:17 AM
விருதுநகர்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் "ஆப்சென்ட்" ஆன ஆசிரியர்கள் பட்டியல் சமர்பிக்க கல்வி அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கல்வி மாவட்டம் தோறும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை பல ஆசிரியர்கள் புறக்கணித்தனர். தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்களை திருத்தம் செய்ய சுயநிதிப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனுபவம் இல்லாத இவர்களால் விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகிறது.
இந்நிலையில் மே 25 ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்தார். இதற்கிடையே திருத்தும் பணியில் "ஆப்சென்ட்" ஆனவர்கள் பட்டியலை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனால் "ஆப்சென்ட்" ஆன ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
