UPDATED : ஏப் 27, 2011 12:00 AM
ADDED : ஏப் 27, 2011 11:54 AM
இன்றைய நவீன உலகில் மொபைல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவில் அதன் பயன்பாடு உள்ளது. பள்ளி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பதே தற்போது கவலைக்குரிய விஷயம்.
பள்ளி பருவத்திலேயே மொபைல் போன்களை அதிகளவில் மாணவர்கள் பயன்படுத்துவதன் மூலம் கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மொபைல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் மாணவர்கள் பாதிக்கப்படலாம்.
உடல் ஆரோக்கியமின்மை பிரச்னை தவிர்த்து மனதளவிலும் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதையும் கல்வியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு மொபைல் போன்கள் வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
பள்ளிக்கு போன்களை எடுத்து செல்ல கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. இதனை ஆசிரியர்களும் வலியுறுத்த வேண்டும். பாதுகாப்புகருதி பள்ளிகளில் தொலைபேசி வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம். பெற்றோர்களின் தொடர்பு எண்களை மாணவர்கள் மனதில் நிறுத்திகொள்ளலாம் என்பது போன்ற ஆலோசனைகளை கல்வியாளர்கள் எடுத்து உரைக்கின்றனர்.
