தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறமையான இளைஞர்கள் தேவை

திறமையான இளைஞர்கள் தேவை

திறமையான இளைஞர்கள் தேவை


UPDATED : ஏப் 27, 2011 12:00 AM

ADDED : ஏப் 27, 2011 02:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2011 12:00 AM ADDED : ஏப் 27, 2011 02:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உயர்கல்வி படித்த திறமையான இளைஞர்கள் இந்தியாவுக்கு அதிகளவில் தேவைப்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.


சி.பி.எஸ்.இ., சார்பில் துபாயில் இந்தியன் உயர்நிலை பள்ளியில் ஆசிரியர் பயிற்சி கருத்தரங்கு நடந்தது. இதில் 32 நாடுகளைச் சேர்ந்து 400 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் கலாம் பேசியதாவது: இந்தியாவில் ஆண்டு தோறும் 30 லட்சம் மாணவர்கள் உயர்கல்வியில் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடிக்கின்றனர்.


மேலும் ஆண்டுதோறும் 70 லட்சம் மாணவர்கள் பத்து அல்லது பிளஸ் 2 முடிக்கின்ற மாணவர்கள் உயர்கல்வியை தொடராமல் வேலைக்கு செல்ல விரும்புகின்றனர். எனவே ஆண்டுதோறும் மொத்தம் 1 கோடி மாணவர்கள் வேலை தேடுகின்றனர்.


21ம் நூற்றாண்டில் உயர்கல்வி படித்த திறமையான இளைஞர்கள் இந்தியாவுக்கு அதிகளவில் தேவைப்படுகின்றனர். அப்போதுதான் அறிவியலில் இந்தியா வெகுவாக முன்னேற முடியும். இதற்கு நமது கல்வியிலும் மாற்றம் தேவைப்படுகிறது.


பள்ளிப்பருவம் தான் ஒவ்வொரு மாணவருக்கும் முக்கியமானது. ஏனெனில் "என்னால் செய்ய முடியும்' என்ற தன்னம்பிக்கையை பள்ளிகள் தான் நமக்கு ஏற்படுத்துகின்றன. பின்னாளில்  "நம்மால் செய்ய முடியும்' மற்றும் "நாடு செய்ய முடியும்' என்பதை உருவாக்குகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us