தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய ரயில்வேயின் எஸ்.சி.ஆர்.ஏ.

இந்திய ரயில்வேயின் எஸ்.சி.ஆர்.ஏ.

இந்திய ரயில்வேயின் எஸ்.சி.ஆர்.ஏ.


UPDATED : ஏப் 27, 2011 12:00 AM

ADDED : ஏப் 28, 2011 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 27, 2011 12:00 AM ADDED : ஏப் 28, 2011 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வே நடத்தும் சிறப்பு வகுப்பு அப்ரன்டீஸ் தேர்வினை (எஸ்.சி.ஆர்.ஏ.) சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் அந்த மாணவரின் வாழ்க்கையே பிரகாசமாகிவிடும். பல லட்சம் செலவு செய்து படித்து, பிறகு ஒரு வேலையைத் தேடி அலையும் பாடப்பிரிவுகளுக்கு மத்தியில், தேர்வில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டு விட்டால் 4 ஆண்டு கால பயிற்சிக்கு மாதந்தோறும் உதவித் தொகையை ரயில்வே நிர்வாகம் வழங்கும். எந்த கட்டணமும் இல்லாமல் சேருவது மட்டும் அல்லாமல், மாதந்தோறும் 9 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுவது எவ்வளவு பெரிய விஷயம்.


4 ஆண்டுகளுக்கு, ரயில்வேத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டு, ரயில்வேத் துறையின் உயர் அதிகாரி பதவியில் அமரும் அளவிற்கு மாணவர்களது திறனை உயர்த்துகிறார்கள்.


இந்த பயிற்சியில் சேரும் 10 மாணவர்களுக்கு பாடங்களைக் கற்று கெடுக்க சுமார் 18  திறன் பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களும், ஆசிரியர்ளும் 1.2 என்ற விகிதத்தில் இருப்பது இந்த பயிற்சிக்கு தனிச்சிறப்பாகும்.


இந்த பயிற்சியை முடித்த மாணவர்கள் ரயில்வே மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறந்த துறைகளின் கீழ் உயர் பதவிகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது கூடுதல் சிறப்பு.


மாணவர்களே, பல ஆயிரங்கள் செலவு செய்து படிக்கும் படிப்பிற்கே வேலை வாய்ப்பு உத்திரவாதம் இல்லை. உதவித் தொகை கொடுத்து பயிற்சி அளித்து, நல்ல பதவியிலும் அமர்த்தும் வேலை வாய்ப்பை தற்போது அறிந்து கொண்டீர்கள் அல்லவா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us