தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு தரும் டாக்சிக்காலஜி

வேலைவாய்ப்பு தரும் டாக்சிக்காலஜி

வேலைவாய்ப்பு தரும் டாக்சிக்காலஜி


UPDATED : ஏப் 28, 2011 12:00 AM

ADDED : ஏப் 28, 2011 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2011 12:00 AM ADDED : ஏப் 28, 2011 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"டாக்சிக்' என்ற கிரேக்க வார்த்தைக்கு "நச்சு' என்பது அர்த்தம். பல்வேறு பொருட்களின் நச்சுத்தன்மை மற்றும் அவற்றினால் உயிர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து படிக்கும் படிப்பு நச்சுயியல் (டாக்சிக்காலஜி). நச்சுயியல் பாடத்தை படிப்பவர்களை "டாக்சிகாலஜிஸ்ட்' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். மருத்துவம், தடயவியல் நச்சுத்துறை, ரசாயன தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் நச்சுயியல் படித்தவர்களின் தேவை உள்ளது.


கல்வித் தகுதி
பிளஸ்2வில் உயிரியல் பாடத்தை எடுத்து படித்திருப்பது அடிப்படை கல்வித்தகுதி. இதுதவிர இளநிலை தாவரவியல், உயரியல், பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி போன்ற பாடங்களை படித்தவர்கள் இந்த துறையில் ஜொலிக்கலாம். இவர்கள் முதுநிலை நச்சுயியல் படித்தால் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நச்சுயியல் துறையில் இந்தியாவிலேயே பி.எச்டி.,யும் படிக்க முடியும்.


வேலைவாய்ப்புகள்
முதுநிலை நச்சுயியல் படித்தவர்கள் துவக்கத்திலேயே 20,000 முதல் 25,000 வரை ஊதியமாக பெற முடியும். இவர்களுக்கு வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் அதிக ஊதியத்துடன் கிடைக்கும். இந்த துறையைச் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்கள் அதிக ஊதியத்திற்காக வெளிநாடுகளில் பணியாற்றி வருவது தற்போதைய நடைமுறை உண்மை. இதன்மூலம் இந்த துறைக்கு உள்ள மதிப்பை உணர்ந்து கொள்ளலாம்.


கல்விநிறுவனங்கள்
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டாக்சிக்காலஜிக்கல் ரிசர்ச், லக்னோ
* சென்ட்ரல் டிரக் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், லக்னோ
* ஜாமியா ஹாம்டர்டு, புதுடில்லி
* இந்திய கால்நடை ஆராய்ச்சி கல்வி மையம், இசாட்நகர்
* பாம்பே காலேஜ் ஆப் பார்மசி, மும்பை
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மசூட்டிக்கல் ரிசர்ச், மொகாலி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us