தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் மனிதநேயம் மாணவர்கள் சாதனை!

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் மனிதநேயம் மாணவர்கள் சாதனை!

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் மனிதநேயம் மாணவர்கள் சாதனை!


UPDATED : ஜூன் 03, 2011 12:00 AM

ADDED : ஜூன் 03, 2011 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2011 12:00 AM ADDED : ஜூன் 03, 2011 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால், 2011 ஜூன் 2ல் வெளியிடப்பட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளின்படி, எமது மையத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களில் 102 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


இதில் 57 மாணவியரும், 45 மாணவர்களும் அடங்குவர்.சைதை துரைசாமி, திருமதி மல்லிகா துரைசாமி மற்றும் வெற்றி துரைசாமி ஆகியோரால், சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு, மனிதநேய அறக்கட்டளை, கடந்த 2005ல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.


மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தின் மூலம், இதுவரை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 பயிற்சிகளின் வாயிலாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்று, உயர் பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முதன்மைத் தேர்வு பயிற்சியின்போது, மாணவ, மாணவியருக்குத் தேவையான பாடத் தொகுப்புகள், மாதிரித் தேர்வுகள், பாடப் புத்தகங்கள், காற்றோட்டமுள்ள வசதியான தங்குமிடம், தரமான உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும், மையத்தில் பயின்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். சிறந்த வல்லுனர்களைக் கொண்டு சரியான முறையில் வழிகாட்டி வகுப்புகளும், மாதிரி நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.


மாணவர்கள், ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் இப்பயிற்சி மையத்தின் மாநில தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு போன்: 2435 8373, 99406 70110, 98401 06162.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us