தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு

சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு

சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு


UPDATED : ஜூன் 26, 2025 12:00 AM

ADDED : ஜூன் 26, 2025 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2025 12:00 AM ADDED : ஜூன் 26, 2025 06:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 2026ம் ஆண்டு முதல் இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த உள்ளது. 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வுகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., தேர்வுக் கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் கூறியதாவது:
2026ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை சி.பி.எஸ்.இ., அங்கீகரித்துள்ளது.

முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும். மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும். முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும்.

முதல் தேர்வில் கலந்து கொள்வது கட்டாயம். இரண்டாம் தேர்வில் விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us