UPDATED : அக் 22, 2020 12:00 AM
ADDED : அக் 22, 2020 10:11 PM
கணக்கு தணிக்கையாளர் என்ற ஆடிட்டர் பணியில் சேர, சி.ஏ., என்ற சார்ட்டட் அக்கவுன்டன்ட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு அடிப்படை தகுதி தேர்வு, இடைநிலை தேர்வு மற்றும் இறுதி தேர்வு என, மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுத, 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும் என, ஏற்கனவே தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன், இந்த தகுதி மாற்றப்பட்டு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆடிட்டர் பணியில் சேர முடியும் என, அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின், ஆடிட்டர் தேர்வில் பங்கேற்போரின் எண்ணிக்கை குறைந்த நிலையில், மீண்டும் கல்வி தகுதி குறைக்கப்பட்டுஉள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறுபவர்கள் இனி, சி.ஏ., தேர்வுகளை எழுதலாம் என, இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.
