தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி கட்டணத்தை 10ம் தேதிக்குள் வெளியிட வேண்டுகோள்

கல்வி கட்டணத்தை 10ம் தேதிக்குள் வெளியிட வேண்டுகோள்

கல்வி கட்டணத்தை 10ம் தேதிக்குள் வெளியிட வேண்டுகோள்


UPDATED : மே 03, 2011 12:00 AM

ADDED : மே 03, 2011 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2011 12:00 AM ADDED : மே 03, 2011 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை, நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, வரும் 10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.


தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கி, ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், சமச்சீர் கல்வி மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின், தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன் கூறியதாவது: தமிழக அரசு அமல்படுத்தும் சமச்சீர் கல்வியை வரவேற்கிறோம். ஆனால், மெட்ரிக் பள்ளி பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அதற்கு இணையாக இல்லை. பாடத்திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளன. மேலும் பாடப்புத்தகம் தரமானதாகவும் இல்லை. கோர்ட் உத்தரவுபடி, தனியார் புத்தக வெளியீட்டாளர்களிடம் இருந்து பாடப் புத்தகங்களை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.


கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும், நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தலைமையிலான குழு, மே 10ம் தேதிக்குள் நியாயமான கட்டணத்தை தீர்மானித்து வெளியிட வேண்டும். கட்டணத்தை தாமதமாக வெளியிட்டால், பெற்றோர் மற்றும் கல்வி நிர்வாகத்திற்கு இடையூறுகள் ஏற்படும். இதை தவிர்க்க, கல்விக் கட்டணத்தை முன் கூட்டியே வெளியிட வேண்டும்.


கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1 முதல் 5 ம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும். 1ம் தேதி திறக்க மாட்டோம் என்று கூறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் வலியுறுத்துவோம். எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை கவலை அளிக்கிறது. மாணவர்களின் நலன் கருதி இம்முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு ராஜசேகரன் கூறினார். தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் விஜயன், நிர்வாக ஆலோசகர் வேல்முருகன் உட்பட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us