UPDATED : ஆக 02, 2023 12:00 AM
ADDED : ஆக 02, 2023 04:14 PM
சென்னை:
ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஆக., 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-1 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஆக., 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.தேர்வு எழுத தற்காலிமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
