UPDATED : மே 01, 2026 06:01 PM
ADDED : மே 01, 2026 06:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் உள்ள விருதுநகர் டி.எஸ்.எம்., மாணிக்கம் நாடார் - ஜானகி அம்மாள் பள்ளி, ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ச்சியாக 38 ஆண்டுகள் மற்றும் ஐ.எஸ்.சி., 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பில், அஸ்வத் (592), தக்ஷா (580), லயா (579) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.
ஐ.எஸ்.சி., 12ம் வகுப்பில், வித்யுத் (497) மற்றும் நிகிலேஷ் (497) முதல் இடத்தை பிடித்தனர். சரவண பெருமாள் (495) 2வது இடமும், இஷான் (494) 3வது இடத்தையும் பிடித்தனர்.
சாதனை புரிந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகமும் முதல்வரும் வாழ்த்தினர்.

