தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப்பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு மருத்துவ கல்லுாரி வாய்ப்பு

அரசுப்பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு மருத்துவ கல்லுாரி வாய்ப்பு

அரசுப்பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு மருத்துவ கல்லுாரி வாய்ப்பு


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 7 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., படிக்கவும், 4 மாணவர்கள் பல் மருத்துவ படிப்பிலும் இடம் கிடைத்துள்ளது.உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எம்.அன்னபூரணி சென்னை மருத்துவக்கல்லுாரியிலும், சண்முகநாதபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.பாண்டியராஜ் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லுாரியிலும், மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பவதாரிணி சென்னை ஓமந்துாரார் மருத்துவக்கல்லுாரியிலும், அல்லிநகரம் அரசுப்பள்ளி ஏ.ஜெயஈஸ்வரன் சேலம் அரசு மருத்துவக்கல்லுாரியிலும், திருப்புவனம் அரசு மகளிர் பள்ளி எஸ்.தீபிகா வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரியிலும், மானாமதுரை அரசு மகளிர் பள்ளி ஏ.தர்ஷினி தேனி அரசு மருத்துவக்கல்லுாரியிலும், பாகனேரி அரசுப்பள்ளி பி.தேவதர்ஷினி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியிலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி எம்.மீனாட்சி மதுரை சி.எஸ்.ஐ., பல் மருத்துவக்கல்லுாரியிலும், அரியக்குடி அரசுப்பள்ளி கே.அபிராமி மதுரை பெஸ்ட் பல் மருத்துவக்கல்லுாரியிலும், காரைக்குடி அரசு பெண்கள் பள்ளி எஸ்.பிரவீனா சென்னை கே.வி. பல்மருத்துவக்கல்லுாரியிலும், ஏரியூர் அரசுப்பள்ளி ஆர்.விக்னேஷ் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பல் மருத்துவக்கல்லுாரியிலும் பி.டி.எஸ்., பட்டப்படிப்புபடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us