UPDATED : மே 20, 2021 12:00 AM
ADDED : மே 20, 2021 03:56 PM
12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
* வாட்ஸ்ஆப்பில் மாணவியருக்குத் தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும். * மாணவ மாணவியர்களுக்குத் தனித்தனியாக வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.* மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனித் தாளில் எழுத வேண்டும்.* விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.* வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக்கூடாது* ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.- இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
