UPDATED : ஜூலை 07, 2021 12:00 AM
ADDED : ஜூலை 07, 2021 06:56 PM
அ நிறம் | அளவு
கோவை:
கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் முதல் பல்கலை, கல்லுாரிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. முதல் அலை தாக்கம் சற்று குறைந்தபோது, நவ., மாதம் கல்லுாரிகள் சிறிது காலம் திறக்கப்பட்டு, இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்ததால், மீண்டும் மூடப்பட்டன.
தற்போது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலை, கல்லுாரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், வேளாண் பல்கலையின் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகத்தின் கீழ் அனைத்து கல்லுாரிகளும் வரும் 12ம் தேதி முதல் திறக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளன.முதுநிலை பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள், பி.எச்டி., மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
