தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செம்மொழி மாநாட்டில் 1,244 கட்டுரைகள்?

செம்மொழி மாநாட்டில் 1,244 கட்டுரைகள்?

செம்மொழி மாநாட்டில் 1,244 கட்டுரைகள்?


UPDATED : ஜன 01, 2010 12:00 AM

ADDED : ஜன 01, 2010 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2010 12:00 AM ADDED : ஜன 01, 2010 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கருத்துரை வழங்கவும், கட்டுரைகள் படிக்கவும் இதுவரை 1,244 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக, முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார்.


கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களின் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:


இந்த மாநாட்டை பொறுத்தவரை, இதுவரை வருவதாக பதிவு செய்திருப்பவர்கள் பட்டியலை எடுத்துரைத்தால், மகிழ்ச்சியடைவீர்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து ஏழு பேர், இந்தோனேசியாவில் இருந்து ஒருவர், இலங்கையில் இருந்து 19 பேர், அமெரிக்காவில் இருந்து 22 பேர், இங்கிலாத்தில் இருந்து ஐந்து பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.


இதுதவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, கத்தார், ஓமன், கென்யா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், நார்வே, நெதர்லாந்து, புருனே, பிரான்ஸ், மலேஷியா, வங்கதேசம், ஜப்பான், ஜெர்மனி, நியூசிலாந்து, தென்கொரியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, செக்கோஸ்லோவாக்கியா, என வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 188 பேரும், நாடு தெரியாத நிலையில் நான்கு பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் இருந்து 742 பேர், என இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவும், கட்டுரைகள் படிக்கவும் இன்று வரை 1,244 பேர் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இவ்வாறு தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். தொடர்ந்து, ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us