தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு முகாம் 1,340 பேர் தேர்வு

வேலைவாய்ப்பு முகாம் 1,340 பேர் தேர்வு

வேலைவாய்ப்பு முகாம் 1,340 பேர் தேர்வு


UPDATED : செப் 13, 2026 12:59 PM

ADDED : செப் 13, 2026 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2026 12:59 PM ADDED : செப் 13, 2026 01:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

கடலுார் மாவட்டத்தில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு (ஆண்கள், பெண்கள் இருபாலரும்) வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு வேலைவாய்ப்பு முகாம் கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் நடந்தது.

முகாமில் 218 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் 3,719 வேலை நாடுநர்கள் பங்கேற்றனர். அதில் 1340 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 88 மாற்றுத்தினாளிகள் உட்பட 312 பேர் 2ம் கட்ட நேர்காணலுக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்களுக்கு பணி ஆணையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஒ., சுந்தரராஜன், வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us