UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM
ADDED : ஜூன் 21, 2014 11:05 AM
பீகார் மாநிலம் தரம்பூரை சேர்ந்த கமலாகாந்த் திவாரி என்ற விவசாயியின் மகனான சிவானந்த்(14) என்ற மாணவன் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 93.4 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான். இதன் பின்னர் சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஐ.டி. தேர்வு எழுதினான். இந்த தேர்வில் 2.587 ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளான்.
இது குறித்து திவாரி கூறுகையில், "ஐ.ஐ.டி.யில் மகன் தேர்ச்சி பெற்றது பெருமையாக உள்ளதாகவும், இந்த சிறிய வயதில் சிறப்பான பணியை செய்துள்ளான் எனவும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைந்து தான் சிறந்த அறிவாளி என நிருபித்துள்ளான்" என கூறினார். சிவானந்த் கூறுகையில், தான் இயற்பியலில் ஆராய்ச்சி செய்ய உள்ளதாகவும், எதிர்காலத்தில் விஞ்ஞானியாக விரும்புவதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு, 126,997 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் 27,151 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பீகார் போஜ்பூர் மாவட்டத்தை சேர்நத 13வயது மாணவன் சத்யம் குமார் என்பவர் ஐ.ஐ.டி. தேர்வில் 679 இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
