UPDATED : மே 04, 2026 07:22 PM
ADDED : மே 04, 2026 07:26 PM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில், 9 தேர்வு மையங்களில் நேற்று நடந்த, 'நீட்' தேர்வில், 143 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆனார்கள். மருத்துவக் கல்வி படிப்பிற்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்நது.
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், 'ஏ' மற்றும் 'பி' என இரு மையங்கள், செட்டிக்கரை கேந்திரிய வித்யாலயா பள்ளி, தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தர்மபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்ரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி என, மாவட்டத்தில் மொத்தம், 9 'நீட்' தேர்வு மையங்களில், 4,409 மாணவ, மாணவியர் தேர்வெழுத விண்ணப்பித்தனர்.
நேற்று காலை, 11:00 மணி முதல் மாணவர்கள் தீவிர சோதனைக்கு பின் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கபட்டனர். மதியம், 02:00 மணி முதல் மாலை, 05:00 மணி வரை தேர்வு நடந்தது. இதில், 143 மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 4,266 மாணவர்கள் தேர்வெழுதினர்.
