தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடுத்த கல்வியாண்டில் 15 புதிய மத்திய பல்கலைக்கழகங்கள்

அடுத்த கல்வியாண்டில் 15 புதிய மத்திய பல்கலைக்கழகங்கள்

அடுத்த கல்வியாண்டில் 15 புதிய மத்திய பல்கலைக்கழகங்கள்


UPDATED : ஆக 07, 2009 12:00 AM

ADDED : ஆக 08, 2009 04:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2009 12:00 AM ADDED : ஆக 08, 2009 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அடுத்த கல்வியாண்டு முதல் குறைந்தபட்சம் 15 புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படத் துவங்கும் என்று யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
இந்த புதிய மத்திய பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்கள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நியமிக்கப்படவுள்ளனர். பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான திட்ட வடிவங்களை இவர்கள் சமீபத்தில் நடைபெற்ற 2 நாள் கருத்தரங்கில் அரசிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய மத்திய பல்கலைக்கழகங்களை 2010-11ம் ஆண்டு முதல் செயல்படுத்துவற்கான திட்ட வரைவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. புதிய மத்திய பல்கலைக்கழகங்களில் 12 தனித்தனி மாநிலங்களில் நிறுவப்படும். ஏற்கனவே நடப்பிலுள்ள 3 மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக தர மேம்பாட்டைப் பெறவுள்ளன. புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் ஜார்க்கண்ட், பீகார், அரியானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஒரிசா, கேரளா, குஜராத், ராஜஸ்தான்,
தமிழகம் ஆகிய மாநிலங்களில் நிறுவப்படவுள்ளன.
ஏற்கனவே நாடெங்கும் 20 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us