எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரியில் 15வது பட்டமளிப்பு விழா
எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரியில் 15வது பட்டமளிப்பு விழா
UPDATED : மே 04, 2026 07:18 PM
ADDED : மே 04, 2026 07:19 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
கீழ்ம்பி எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா மே 2 ல் நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, கீழ்ம்பியில் உள்ள எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மே 2 ல் நடந்த 15வது பட்டமளிப்பு விழாவில், தலைமை விருந்தினராக, சாஸ்திரா நிகர்நிலை பல்கலை துணைவேந்தரும், டாடா சன்ஸ் மேலாண்மை துறையின் தலைவர் வைத்ய சுப்ரமணியம் பங்கேற்று, 287 மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
கல்லூரி செயலர் சி.கே ராமன், கல்லூரி துணை செயலர் சுமந்த் சி.ராமன், கல்லூரி முதல்வர் கே.திருநாமகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
