UPDATED : மே 24, 2016 12:00 AM
ADDED : மே 24, 2016 10:15 AM
அ நிறம் | அளவு
பி.இ., பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.55 லட்சம் பேர், அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், &'ஆன்லைனில்&' பதிவு செய்யப்படுகிறது.
அண்ணா பல்கலை இணையதளத்தில், 2.25 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.இவர்களில், 1.55 லட்சம் பேர் மட்டுமே முறையாக விண்ணப்பங்களின் விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்.
மே, 31 வரை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஜூலை, 4க்குள் பதிவு செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
