UPDATED : ஜூன் 13, 2016 12:00 AM
ADDED : ஜூன் 13, 2016 10:33 AM
அ நிறம் | அளவு
சென்னை
: அண்ணா பல்கலையின் இன்ஜி., முதுகலை
படிப்புக்கான நுழைவுத் தேர்வில், 16 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, டான்செட் என்ற பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
எம்.பி.ஏ.,
- எம்.சி.ஏ., படிப்புக்கு, நேற்று முன்தினம் தேர்வு நடந்த
நிலையில் நேற்று, எம்.இ., - எம்.டெக்., படிப்புக்கு தேர்வு நடந்தது. இதில்,
தமிழகம் முழுவதும், 20 மையங்களில், 16,047 பேர் பங்கேற்றனர்.
