இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு ஏப்.16 வரை விண்ணப்பிக்கலாம்
இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு ஏப்.16 வரை விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஏப் 27, 2011 12:00 AM
ADDED : ஏப் 27, 2011 10:40 AM
திண்டுக்கல்: அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சிலிங்கிற்காக ஏப்.29 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே மாத இறுதியில் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் கோடை விடுமுறை துவங்குவதற்கு முன் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் தர வேண்டும். இந்தாண்டு ஓட்டு எண்ணிக்கைக்குப் பின் புது அரசு அமைந்தபின் விண்ணப்பங்கள் பெறப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் வரும் 29க்குள் விண்ணப்பங்களை அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. அரசு அறிவிக்கும் நாட்களில் விண்ணப்பத்தை சேகரிக்க சிரமம் ஏற்படும். எனவே முன்னதாகவே விண்ணப்பங்களை உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் வாங்கி வருகின்றனர்" என்றார்.
