அரசு கல்லுாரியில் 1,644 காலியிடங்களில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு
அரசு கல்லுாரியில் 1,644 காலியிடங்களில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு
UPDATED : செப் 09, 2025 12:00 AM
ADDED : செப் 09, 2025 08:11 AM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,644 இடங்களில் சேர தகுதியான மாணவ, மாணவியருக்கு மாவட்ட கலெக்டர் சதீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், செயல்படும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2025-26ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையில் காலியாக உள்ள, பாடப்பிரிவுகளில் சேர்க்கை நடந்து வருகிறது.
அதன்படி, தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 150 இடங்கள், காரிமங்கலம் அரசு மகளிர் கல்லுாரியில், 250, பாலக்கோடு எம்.ஜி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரியில், 556, பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், 90, அரூர் கலை அறிவியல் கல்லுாரியில், 260, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 167, ஏரியூர் கலை மற்றும் அரசு கல்லுாரியில், 167 என மொத்தம், 1,644 காலியிடங்கள் உள்ளன. அவற்றில் விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.