UPDATED : ஆக 10, 2011 12:00 AM
ADDED : ஆக 10, 2011 04:05 PM
அ நிறம் | அளவு
"தொழிட்நுட்ப கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்கான, மாணவர்கள் சேர்கை, வரும் 17ம் தேதி வரை நடைபெறும்" என, தொழிட்நுட்ப கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நடப்பு கல்வியாண்டில் டிப்ளமோ படிப்புகளில் சேர, தொழிட்நுட்ப கல்வித்துறை வாய்ப்பளித்துள்ளது.
இதன்படி, தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் தெரிந்து கொண்டு, ஆக., 17ம் தேதிக்குள் சேர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
