UPDATED : மார் 28, 2016 12:00 AM
ADDED : மார் 28, 2016 10:53 AM
விழுப்புரம்
:
அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில், 18 வது பட்டமளிப்பு விழா நடந்தது.
அரசூர்
வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்
கல்லுாரில், 18 வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி தலைவர் விஜயா முத்துவண்ணன்
தலைமை தாங்கினார். முதன்மை செயலாக்க அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.
செயலாளர் ராமநாதன், இயக்குனர் முத்துவண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லுாரி முதல்வர் அன்பழகன் ஆண்டறிக்கை வாசித்தார். நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் இணை துைண தலைவர் பாலாஜி, 374 மாணவர்களுக்கு, பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் அண்ணா பல்கலைக் கழகத் தேர் வில், மாநில அளவில் முதுநிலை பொருள் உருவாக்கம் மற்றும் வளர்ச்சித் துறையில் முதலிடம் பெற்ற மாணவர் கோபாலகிருஷ்ணன், முதுநிலை உட்பொதிமை முறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் மாநில அளவில் 9 வது இடம் பெற்ற, மாணவி தரணி, 15வது இடம் பெற்ற சத்தியா மற்றும் கல்லுாரியில் முதல் இரண்டு இடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
