UPDATED : பிப் 10, 2025 12:00 AM
ADDED : பிப் 10, 2025 09:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் :
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஜே.இ.இ., (ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு) தேர்ச்சி பெற வேண்டும். முதன்மை, பிரதானம் என இரு கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படும்.
முதன்மை தேர்வு கடந்த ஜன., 22ம் தேதி துவங்கி, 30 வரை நடந்தது. இதன் முடிவுகள் பிப்., 12ல் வெளியாகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்வு, ஏப்ரல், 1 முதல், 8 வரை நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் பிப்., 25 வரை விண்ணப்பிக்கலாம்.
முதன்மை தேர்வு எழுதியவர்களும் ஏப்ரலில் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம்; கூடுதல் விபரங்களை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.