தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரிகளில் 2வது ஷிப்ட் முறை ரத்து?

அரசு கல்லூரிகளில் 2வது ஷிப்ட் முறை ரத்து?

அரசு கல்லூரிகளில் 2வது ஷிப்ட் முறை ரத்து?


UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM

ADDED : ஜூன் 17, 2011 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM ADDED : ஜூன் 17, 2011 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநிலத்தில், 69 அரசு கல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றில், ஆண்டுதோறும் இளங்கலை, முதுகலைப்பட்ட படிப்புகளுக்கு, மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.


கடந்த தி.மு.க., ஆட்சியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ஷிப்ட் முறையை அரசு அமல்படுத்தியது. உயர்கல்வி பெறும், மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்தது. ஆனால், தரமான கல்வி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.


இப்பிரச்னையை தீர்க்க, ஒவ்வொரு கல்லூரியிலும் தரமான கல்வி வழங்க, தற்போதுள்ள அரசு முடிவு செய்துள்ளது. இக்கல்வி ஆண்டு முதல், கல்லூரிகளில், 2வது ஷிப்ட் முறை ரத்து செய்யலாமா என்ற யோசனை எழுந்துள்ளது. இதற்கு பதில், மாணவர்களின் எண்ணிக்கையை, தற்போதுள்ள 32ல் இருந்து, 40 ஆக உயர்த்திட அரசு திட்டமிட்டுள்ளது.


உயர்கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது அரசு கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில், முதல் ஷிப்ட் வகுப்பிற்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த, கல்லூரிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அரசு கல்லூரிகளில், பேராசிரியர்கள் தட்டுப்பாடு நிலவுவதால், 2வது ஷிப்ட் முறை ரத்து செய்யப்படலாம் என, கல்வித்துறையில் பேச்சு அடிபடுகிறது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us