தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஒரிஜினலா?

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஒரிஜினலா?

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஒரிஜினலா?


UPDATED : நவ 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்துள்ளது அரசு தேர்வுத்துறை.
தமிழகத்தில் உண்மையான கல்விச் சான்றிதழ்களைப் போல், அச்சு அசலாக போலியாக சான்றிதழ் தயாரிக்கும் கும்பல்கள் இருக்கவே செய்கின்றன. இவர்களிடம் அதிக பணம் கொடுத்து, போலி சான்றிதழ் வாங்கி பணியில் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
இவர்கள் பணியில் சேர கொடுத்துள்ள சான்றிதழின் உண்மைத் தன்மையை தெரிந்து கொண்டால், உண்மையான சான்றிதழ் எது, போலியான சான்றிதழ் எது என்பதை கண்டறிய முடியும். இதற்காக அரசுத்தேர்வு துறை, பள்ளி மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிவதற்கு, தற்போது வாய்ப்பு அளித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வு ஆகியவற்றுக்கான உண்மைத் தன்மையை கோரி விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்போர், சரிபார்ப்பு கட்டணம் 50 ரூபாயை கருவூல செலுத்து சீட்டு மூலம் செலுத்த வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து விண்ணப்பிப்போர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 50 ரூபாய்க்கு, அரசுத்தேர்வுகள் இயக்குனர் பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி., எடுத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை பொதுமக்கள் அணுகலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us