தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே தேதியில் 2 தேர்வுகளால் மாணவர்களுக்கு சிக்கல்?

ஒரே தேதியில் 2 தேர்வுகளால் மாணவர்களுக்கு சிக்கல்?

ஒரே தேதியில் 2 தேர்வுகளால் மாணவர்களுக்கு சிக்கல்?


UPDATED : பிப் 02, 2011 12:00 AM

ADDED : பிப் 02, 2011 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2011 12:00 AM ADDED : பிப் 02, 2011 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சி.பி.எஸ்.இ. நடத்தும் ஏ.ஐ.இ.இ.இ. தேர்வும், ராணுவத்தின் மருத்துவ சேவைகள் அமைப்பு(ஏ.எப்.எம்.சி) நடத்தும் ஏ.எப்.எம்.சி-எம்.பி.பி.எஸ். தேர்வும் வரும் மே மாதம் 1 ம் தேதி நடத்தப்படுகின்றன. ஆனால் அதேசமயம் ஏ.ஐ.இ.இ.இ. தேர்வு காலை 9.30 முதல் மதியம் 12.30 வரையிலும், ஏ.எப்.எம்.சி. தேர்வுகள் மதியம் 2.30 முதல் மாலை 4.30 வரையிலும் நடத்தப்படுகின்றன.


குறைந்த அளவிலான மாணவர்கள் ஒரே நாளில் இந்த 2 தேர்வுகளையும் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 தேர்வுகளுமே ஒரே நாளில் நடந்தாலும், பரஸ்பரம் நேரங்களை மாற்றிக்கொள்ள இரண்டு தரப்பும் முடிவெடுத்துள்ளது மாணவர் தரப்பிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இரண்டு தேர்வுகளையுமே எழுதக்கூடிய மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் வேறுவேறு இடங்களில் இருந்தால், ஏ.எப்.எம்.சி. தேர்வு நடக்கும் மையத்திலேயே ஏ.ஐ.இ.இ.இ. தேர்வையும் எழுதுவதற்கு வசதிசெய்து தரப்படும். ஆனால் அந்த குறிப்பிட்ட நிலையத்திலேயே ஏ.ஐ.இ.இ.இ. தேர்வு மையம் இருப்பதோடு, இடமும் இருக்க வேண்டும். அதேசமயம் இடமாறுதலைக் கோரும் மாணவர் ஏ.எப்.எம்.சி. நுழைவுத்தேர்வு அட்டையைக் காண்பிக்க வேண்டும். இத்தகைய தேர்வு மைய மாற்றல் வசதியை செய்து கொடுப்பது சி.பி.எஸ்.இ. அமைப்பின் சொந்த விருப்பத்தை பொறுத்தது மட்டுமே அல்லாது சம்பந்தப்பட்ட மாணவரின் விருப்பம் சார்ந்தது அல்ல.


ஏ.ஐ.இ.இ.இ. தேர்வை ஏப்ரல் 24 ம் தேதியே நடத்துவதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு அது ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டு மே மாதம் 1 ம் தேதி நடத்தப்படுகிறது. இதனால் தேர்வுக்கான புல்லட்டின் விற்பனையும் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us